So after starting the series of Navagraha ashtothrams, I wanted to share the corresponding songs on the Navagrahas sung very melodiously in Tamil by Smt. S. Sowmya. The compilation is available as an audio cassette titled 'Nalam tharum Navagrahangal'. Each song in this album is short and very easy to learn. A song typically contains the following information about each of the navagrahas:
- Navagraha sthuthi
- Favorite Flower
- Favorite Color
- Dhaanyam
- Gem stone
- Neivedhyam
- Thiru Thalam
- Palan
- Navagraha Gayathri
I received this cassette from my mom during my wedding. I've found that playing these songs at least once during a week brings great tranquility in our house. I strongly recommend this cassette to the visitors of this blog. You can also listen to this album available online at raaga.com. Please follow this URL http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=TD00329
I have gathered the lyrics for the songs (published below) just by listening to them. You can listen to the songs while following the lyrics. Soon you will find yourself singing along with Sowmya!
Indeed a great way to glorify the nine powerful planets in our native language!
---------------------------------------------------------------------------
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து
என் உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளிசனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
----------------------------------------------------------------------
சூரியன்
ஜபாகுஸும ஸந்காஸம் காஸ்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம்
அண்டவெளி எனும் மண்டலத்திலே
பொங்கும் ஒளியெனும் சூரியனே
ஆயிரம் கோடி தாரகை போற்ற
அரசாங்கம் செய்யும் ஆதவனே
சூரிய பகவானே சூரிய பகவானே
சுந்தர வானில் அந்தரம் திகழும் சூரிய பகவானே (அண்டவெளி)
சந்த்யா காலங்கள் உந்தன் தரிசனத்தின்
கருணை கோலங்கள் சுடர்வோனே
வந்தனைக்கு உகந்தவளாம் காயத்ரி தேவியின்
வடிவில் பொருளேர்க்கும் கதிரோனே
உதய கிரணனே போற்றி ஆதித்யனே போற்றி
புஷ்கராக்ஷனே போற்றி ஜகதாநந்தனே போற்றி (அண்டவெளி)
செந்தாமரை மலரை சேவடி சேர்த்தேனே
சித்திகள் தந்தருள் செந்நிறனே
சந்ததம் உன் அழகை கிழக்கில் கண்டேனே
சத்தியம் உன் சக்தியென உணர்ந்தேனே
பானுவே போற்றி அருணனே போற்றி
திவாகரனே போற்றி ஞாயிறே போற்றி (அண்டவெளி)
சூரியனார் கோவில் திருத்தலம் திகழ்பவனே சுந்தர தேர் ஏறி வருபவனே ஆரியனே எட்டு கோள்களும் சூழ்ந்திடவே ஆள்பவனே ச்சாயா நாயகனே
காஸ்யபன் மகனே போற்றி தேஜோ ரூபனே போற்றி
உஜ்வலனே போற்றி மாணிக்க ஒளியே போற்றி (அண்டவெளி)
சிவனை தேவதையாய் கொண்ட காரகனே
செங்கரும்பு சர்க்கரை பொங்கலிட்டேன்
நவனே கோதுமையும் படைத்தேன் நானே - இந்த
நானிலம் போற்றும் புகழ் தருவாயே
ஓம்
ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி
தந்ந: ஸூர்ய: ப்ரசோதயாத்
-----------------------------------------------------------------------------------
சந்திரன்
ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ஸஸிநம் ஸோமம் ஸம்போர் மகுட பூஷணம்
மந்திர நிலவே சந்தன ஒளியே மதியெல்லாம் வாழும் குளிர் மதியே
அந்தக விண்ணில் சங்கரன் சிரசில் அதிசயம் காட்டும் அருள் நிதியே (மந்திர)
திங்களெனும் நாமத்துடனே திங்களூர் திகழ்பவனே
வெண் வண்ண ஆடையனே முத்து விமானம் அமர்பவனே
அன்னைக்கும் புத்திக்கும் அருள் தரும் காரகனே (அன்னை)
வெண்ணலரி மாலையிட்டோம் விழிக் கொண்டு காத்திடுவாய் (மந்திர)
பார்வதியின் பேரருளை பாய்ந்திட செய்பவனே
நீர்வண்ண முத்தொளியே ரோஹிணியின் துணைவோனே
பச்சை நெல் பால் சாதம் படைத்தோம் சந்திரனே (பச்சை)
இச்சையுடன் ஏற்று அருள்வாய் இடர்களை போக்கிடுவாய் (மந்திர)
ஓம்
பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நஸ் ஸோம: ப்ரசோதயாத்
---------------------------------------------
அங்காரகன் (செவ்வாய்)
அங்காரகன் (செவ்வாய்)
தரணி கர்ப்ப ஸ்ம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் ஸக்தி ஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம்
எட்டு திசையிலும் மட்டில்லாத வெற்றிகள் தரும் நாயகா
நெற்றி கண்ணன் நெற்றி நீரின் சக்தியே அங்காரகா
செவ்வாய் பகவானே மங்கள செவ்வாய் பகவானே (செவ்வாய்)
அன்ன வாகனனே பவள ரத்தினனே
அங்காரகனே போற்றி போற்றி
வைத்யநாதன் முத்து குமரன் வாழ் தலம் நீர் வளர் தலம்
வைத்தியமின்றி நோய்கள் நீங்க வரம் தரும் வைத்தீஸ்வரம்
புவநசுதனே செண்பகப்பூ செந்நிற துகில் ஏற்க வா
துவரை கொண்டு உன் ப்ரீதி செய்தோம்
துயர்கள் நீக்கிட தெற்கில் வா (எட்டு)
மாலினி சுசூலினி மகிழ வலம் வரும் தேவனே
மேஷனே பகை நாசனே
வெல்ல பொங்கல் பண்ணி வைத்தோமே
காலியில் கருங்காலியில் உன் வேள்வி செய்தோம் நாயகா
கருணையில் ரவி அருணனை போல் கனிவருள்வாய் தூயவா (எட்டு)
ஓம்
வீர த்வஜாய வித்மஹே விக்ந ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்
-------------------------------------------------------------------------
புதன்
பிரியங்கு கலிகா ஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம் பதம் ப்ரணமாம்யஹம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
பொன் மொழி உன் புகழ் சொல்கிறதே
மின்னிடும் சந்திர புத்திரனே உன்னை
எண்ணிட நெஞ்சம் மறத்திலதே (பொன்)
பச்சை நிறத்தவனே வட கீழ் திசை நோக்கி எழுந்து வளர்ந்திடும்
பச்சை நிறத்தவனே எழில்
பச்சை மாமலை விஷ்ணு மாலினை அதிபனாய் ஏற்று அவனடி தொழுதிடும் பச்சை நிறத்தவனே
புரவியின் மீதினில் உலகினில் உலவும் புண்ணியனே புத பகவானே
வரமழை பெய்திட சுபம் எனும் கரமுடன் எழுபவனே புத பகவானே (பொன்)
திருவெண்காடு அமர்வாய் ஒளி மரகத மணியுடன் உள்ளம் உவந்தே திருவெண்காடு அமர்வாய்
வெண் காந்தள் மாமலர் ஏந்தியே நினது தாளிலே வைத்து தலை வணங்குவோம்
பொங்கலில் அன்னமும் பயர் எனும் தானியம் படைத்தோமே புத பகவானே (பொங்கலில்)
ஞானமும் கல்வியும் கலைகளும் யோகமும் நல்கிடுவாய் புத பகவானே (பொன்)
ஓம்
கஜ த்வஜாய வித்மஹே ஸுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்
----------------------------------------------------------------------------------
குரு (வியாழன்)
தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சந ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்
உருவாகும் உலகிலெல்லாம் குருவாகும் பகவானே
திருவாகும் செல்வமெல்லாம் தினம்தோறும் தருவோனே (உருவாகும்)
தலம் ஆலங்குடியினிலே தளம் கொண்டு அமர்வோனே
குலமேவர் குலம் காக்கும் புஷ்பராக சுடரோனே (உருவாகும்)
பொன்மஞ்சள் மேனியிலே திகழ் மஞ்சள் ஆடையனே
வெண்முல்லை மலரளித்தோம் வித்தைகளை தந்தருள்வாய் (உருவாகும்)
பெரும் யானை வாகனம் மேல் வரும் வியாழ பகவானே
அரசாலே அனல் வளர்த்தோம் அரசாளும் நிலை தருவாய் (உருவாகும்)
ஸ்ரீம் என்னும் மந்திரத்தால் திருக்கோலம் இட்டழைத்தோம்
பொரிகடலை படைத்தளித்தோம் நீ பெயர்கையில் அருள் தருவாய் (உருவாகும்)
ஓம்
வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்
---------------------------------------------------------------------------------
சுக்கிரன் (வெள்ளி)
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்
சுரர்களுக்கும் புதிரென சுழலுகின்ற நாதனே
சுக்கிரனாய் நாமம் ஏற்கும் அசுர குரு ராஜனே
ப்ருகுமுனிக்கு மைந்தனே புனிதமான வெள்ளியே
பரமன் உன்னை நாடினோம் புகழை எல்லாம் சொல்லியே
பார்கவ குலத்துதித்த பரம ஞான பண்டிதா
பக்தி மிளிரும் வெண்கமல அர்ச்சனையை ஏற்க வா
வார்சடை சிவன் வயிற்றில் தவம் புரிந்த வேந்தனே
வயிரம் என்னும் நவமணிக்குள் வடிவம் காட்டும் சீலனே (சுரர்)
கஞ்சனூர் திருத்தலத்தின் கருணை வடிவ சின்னமே
கருடன் மீதிலே அமர்ந்து காக்கும் பணியின் வண்ணமே
தஞ்சமென்று உனது பாதம் பற்றினோமெ புண்ணியனே
தயவுடன் களத்ரதோஷம் நீக்கு ஒற்றை கண்ணனே (சுரர்)
புள்ளிவெள்ளை ஆடையனே கற்கண்டு பொங்கலும்
புதிய மொச்சை தானியம் நிவேதனமே புனிதனே
துள்ளி நீயும் வந்திடுவாய் துலாம் வ்ருஷப அதிபனே
சௌபாக்கியம் தந்திடுவாய் சுக்கிரனே இனியனே (சுரர்)
ஓம்
அஸ்வ த்வஜாய வித்மஹே தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்ந: ஸுக்ர: ப்ரசோதயாத்
--------------------------------------------------------------------------
சனி
நீலாஞ்ஜந ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைஸ்சரம்
எள்ளாலே திரியமைத்து ஏற்றி விளக்கெரிய வைத்தோம்
எங்கள் குலம் காக்க வேண்டுமே சனி பகவானே வந்த இடர் தீர்க்க வேண்டுமே
சனி வார நாளினிலே சன்னதியை சுற்றி வந்தோம்
சங்கடங்கள் போக்க வேண்டுமே சனி பகவானே சஞ்சலங்கள் தீர்க்க வேண்டுமே
அஞ்சனமை நீலமணி ஆடை தேகம் கொண்டாயே
ஆதவனின் புத்திரனாய் அவதாரம் செய்தாயே
அன்றலர்ந்த கருங்குவளை மாலையினை சாற்றி நின்றோம்
அஷ்டமத்தில் வந்தால் கூட அமைதியை தர வேண்டும் (எள்)
நளனுக்கு வாழ்வு தந்த நள்ளாற்றின் நாயகனே
நாவலோடு எள்ளன்னம் படைத்தோமே துயவனே
வளமான வாழ்வு வர வன்னியிலே தீ வளர்த்தோம்
வானவனே மனமிரங்கு வாழ் நாளை நீ வழங்கு (எள்)
மந்த நடைக் கொண்டவனே மகர கும்ப நாயகனே
வந்த பிணி தீர்ப்பதற்கு வேகமாக வாருமய்யா
ஆசி தர அண்டங்கரு காக்கையினில் அமர்பவனே
ராசியிடம் வந்தாலும் ராசியாக வேண்டுமப்பா (எள்)
ஓம்
காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
--------------------------------------------------------------------------------
ராகு
அர்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தநம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
கண்களுக்கும் தென்படாமல் கற்பனைக்கும் பிடிபடாமல்
கதிர்நில்லா வினை விரட்டும் ராகு நாயகா
தென்புறத்து மேற்கு திக்கில் திருவருள் அளித்து நிற்கும்
தேகம் நாகமாக தோன்றும் அசுர நாயகா
ராகு நாயகா யோக காரகா
ராகு நாயகா மேஷ வாஹனா
பாதியான அசுர வேகம் பாதியான தேவ யோகம்
பரிமளிக்க கோலம் காட்டும் மகா வீரனே
பாற்கடல் எழுந்த அமுதை தான் மறைந்து உண்ண வந்த
பத்ரகாளி அம்சமான அசுர சூரனே
ராகு நாயகா யோக காரகா
ராகு நாயகா மேஷ வாஹனா (கண்களுக்கும்)
மந்தரை மலர் தொடுத்து உளுந்தினை படைத்தளித்து
மலரடியில் வேண்டுகிறோம் ராகு தேவனே
சந்ததம் நலம் தர திருநாகேஸ்வரம் திகழ்ந்து
ஞான வழியிலே நடத்தும் நாக ராஜனே
ராகு நாயகா யோக காரகா
ராகு நாயகா மேஷ வாஹனா (கண்களுக்கும்)
அப்பமோடு தேனையும் அழகு கரிய ஆடையும்
எடுத்துனக்கு ப்ரீதி செய்தோம் ராகு நாயகா
தப்பில்லாமலும் தடங்கல் தானிலாமலும் எடுத்த
காரியம் ஜெயிக்க வேண்டும் கோமேதகா
ராகு நாயகா யோக காரகா
ராகு நாயகா மேஷ வாஹனா (கண்களுக்கும்)
ஓம்
நக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்
------------------------------------------------------------------
கேது
பலாஸ புஷ்ப ஸங்காஸம் தாரகா க்ருஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்
வானகிரியாம் அந்த கீழ்பெரும்பள்ளத்தில்
மோன நிலையோடு அருளும் கேது பகவானே
ஞானம் தொழில் முக்தியும் பூமி பொருள் புகழையும்
நாடினால் கூடிடச் செய்யும் அரவோனே (வான)
சிம்மத்தின் மீதேறி செவ்வல்லி மலர் சூடி
திருவருளை தினம் பொழியும் வரத கையோனே
சிரம் நாக உருவோடு பரமபத திருமாலின்
நினைவோடு தவம் செய்த அசுரர் உறவோனே
செவ்வாடை ப்ரீதி செய்தோம் கேதுவே பீடை அகற்ற வரணும்
தர்ப்பை உனக்கர்ப்பணம் கேதுவே தயங்காமல் காக்க வரணும் (வான)
விண்மீன்கள் தலைவனாய் தென்மேற்கு திசையாளும்
மாயனே சிவன் மைந்தனே
கண்கண்ட ஒளியோடு கனிவான இல்லறம்
எந்நாளும் தரும் மந்தனே
கொள்ளன்னமே படைத்தோம் உந்தன் வைடூர்யமே அணிந்தோம்
உளுந்து வடை நெய்வேத்தியம் கேதுவே வறுமையை நீக்க வரணும் (வான)
ஓம்
அஸ்வ த்வஜாய வித்மஹே ஸுல ஹஸ்தாய தீமஹி
தந்ந: கேது: ப்ரசோதயாத்
-----------------------------------------------------------------------------------------------